×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரசாரம்

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசார பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: ஜி.ராமகிருஷ்ணன் கடலூர் (விருத்தாசலம், நெய்வேலி), கே.பாலகிருஷ்ணன் மதுரை, தென்காசி (ஸ்ரீவில்லிபுத்தூர்), டி.கே.ரங்கராஜன் -மதுரை, வாசுகி-    கோவை, சவுந்தரராசன்    - தென்சென்னை, சுதா சுந்தர்ராமன்-திண்டுக்கல், கரூர், பாலபாரதி- தூத்துக்குடி பிரசாரம் செய்கின்றனர்.

மேலும், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  12ம் தேதி மதுரை, தென்காசி (ஸ்ரீவில்லிபுத்தூர்), 13ம் தேதி மதுரை, 14ம் தேதி திண்டுக்கல் (சத்திரப்பட்டி, பழனி) 15, 16ம் தேதி கோவையிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : leaders ,CPI (M) , Marxist, Communist, Leader, Propaganda
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...