×

ஜெட் நிறுவனத்தின் சர்வதேச விமான சேவை திடீர் ரத்து:

புதுடெல்லி: நாட்டில் செயல்படும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முன்னணி வகித்து வந்தது. தற்போது, இந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக,  தன்னிடம் உள்ள 119 விமானங்களில் 90 விமானங்களை ஏற்கனவே இது தரையிறக்கி விட்டது. இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக தனது சர்வதேச விமானச் சேவை அனைத்தையும் இந்நிறுவனம் நேற்று ரத்து செய்தது. இந்த நடவடிக்கையால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jet , Jet, company, international, service, cancellation:
× RELATED புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன்...