×

எதிர்க்கட்சிகள் பயந்து போய் மக்களிடம் கிலியை ஏற்படுத்துகின்றனர்: பிரசாரத்தில் மோடி பேச்சு

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்களின் ஊழல் கடைகள், வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு முடிவு கட்டப்படும் என காங்கிரஸ் தலைமையிலான மெகா கலப்பட கூட்டணி பயப்படுகிறது. அதனால் அவர்கள் மக்களிடம் என்னைப் பற்றி கிலியை ஏற்படுத்துகின்றனர் என பிரதமர் மோடி பேசினார். பீகார் மாநிலம், பாகல்பூரில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: ராணுவத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், தீவிரவாதிகளையும், நக்சல்களையும் ஒழிக்க பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் முழு சுதந்திரம் வழங்குகிறோம்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களின் ஊழல் கடைகள், வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு முடிவு கட்டப்படும் என காங்கிரஸ் தலைமையிலான மெகா கலப்பட கூட்டணி பயப்படுகிறது. அதனால்தான், அவர்கள் என்னைப் பற்றி மக்களிடம் கிலியை ஏற்படுத்துகின்றனர். அம்பேத்கர் அறிமுகம் செய்த இடஒதுக்கீட்டு முறையை வலுவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முறையை ஒழித்துவிடுவார். அரசியல் சாசன அமைப்புகள் எல்லாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், உங்களின் காவலாளி, இடஒதுக்கீடு முறையை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார் என்பதுதான் உண்மை. இவ்வாறு மோடி பேசினார்.

பெரிய தலைவரின் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்:

அசாம் மாநிலம் கெண்டுகோனா பகுதியில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள பங்களாவில் வசிக்கும் ஒரு பெரும் தலைவர் வீட்டில் சில நாட்களாக நடந்து வரும் வருமான வரி சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது ஏழை குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் ஊழல் செய்யப்பட்ட பணம். தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் ஊழலில் ஈடுபடுகிறது. அவர்கள் கொள்ளையடிக்காவிட்டால், தேர்தலில் எப்படி போட்டி போட முடியும்? இது போன்ற நபர்களுக்கு ஓட்டுப் போடுவது பாவம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kili ,Modi , Opposition, scared, Modi, talk
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...