பாமகவுக்கு 500 கோடி, தேமுதிகவுக்கு 200 கோடி அதிமுக கூட்டணி செட்டில்மென்ட் கூட்டணி: சி.ஆர்.சரஸ்வதி புதுக்குண்டு

சிவகங்கை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் தேர்போகி பாண்டிக்கு காரைக்குடியில் வாக்குகள் சேகரித்து சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:  சென்னையில் நடந்த தையல் கலைஞர்கள் தேர்தலில் 18 ஓட்டுக்கூட வாங்காதவர் எச்.ராஜா. அவரை எம்பி தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் நிறுத்தியுள்ளனர். மதவாதத்தை தூண்டும் விதத்தில் எச்.ராஜா பேசிய பேச்சுகளை மக்கள் மறக்கவில்லை. மரியாதை இல்லாமல், நாகரீகம் இல்லாமல் பேசுவார். பெண்களை பற்றி பல கருத்துக்களை பேசியவர். உள்ளூரிலேயே தாங்க முடியவில்லை, இவரை டில்லிக்கு அனுப்பினால் என்னாவது? மக்கள் பிரச்னைகளுக்கு தமிழகம் வராத மோடி தற்போது ஓட்டுக்கேட்டு அடிக்கடி வருகிறார்.

ரஜினிகாந்த் நதிநீர் இணைப்புக்கு ஆதரவு என கூறுவதற்கு பதிலாக வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு என கூறிவிடலாம். வரும் ஆனா வராது என்ற நிலையில் இருப்பவர்.  2014 தேர்தலின்போது சொல்லியதை நிறைவேற்றாதவர்கள் பாஜகவினர்.  எச்.ராஜா வாக்குக்கேட்டு வரும்போது 15 லட்சத்தை வங்கியில் போட சொல்லிவிட்டு பின்னர் ஓட்டு கேட்டு வரச்சொல்லுங்கள்.  மன சாட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இது செட்டில்மென்ட் கூட்டணி, பாமகவுக்கு 500 கோடி, தேமுதிகவுக்கு 200 கோடி என மாட்டு சந்தையில் துண்டு போட்டு முடிவு செய்வதுபோல் பேரம் பேசி கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலில் நின்று வெற்றி பெற்று தான் பதவி பெற முடியும். ஆனால் உலகத்திலேயே நாலுகாலில் முட்டி போட்டு சென்று முதல்வர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி.இவ்வாறு பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: