×

கண்டிஷன் போட்ட டிடிவி ஓட்டம் பிடித்த நடிகர் விவேக்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான ஒரு அணியும், டிடிவி.தினகரன் தலைமையிலான ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. தற்போது அமமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி டிடிவி.தினகரன் துணை பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் 40 நாடாளுமன்ற தொகுதி, 19 சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில், நடிகர் ரஞ்சித் ஆகியோரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள், அதிமுக தலைவர்கள் மற்றும் இந்த ஆட்சியை விமர்சித்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, நடிகர் விவேக் அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கோரி டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு, நடிகர் விவேக் சம்மதம் தெரிவித்தார். ஆனால், விவேக் தரப்பில் இருந்து நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டது. அதில், அதிமுகவை சேர்ந்த தலைவர்களை விமர்சித்து பேச மாட்டேன்.

மேலும், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களையும் விமர்சிக்க மாட்டேன். அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையை மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்வேன் என்று டிடிவி.தினகரனிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிடிவி.தினகரன் தரப்போ அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசினால் மட்டுமே மக்கள் மத்தியில் பிரச்சாரம் எடுபடும். பொத்தாம் பொதுவாக பேசினால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை நடிகர் விவேக் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் விவேக் தரப்பில் நான் அனைவருக்கும் பொதுவானவன். எனவே, யாரையும் விமர்சித்து பேச முடியாது என்று கூறி பிரச்சாரத்திற்கு வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விவேக் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதை விவேக் மறுத்து விட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vivek ,Competition DVV , TVV ,actor Vivek
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...