சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சோளிங்கர்: 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்குவது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். 1305 படிகள் கொண்ட பெரிய மலை மீது யோக நிலையில் நரசிம்மர் அருள் பாலிக்கிறார். 450 படிகள் கொண்ட சிறிய மலை மீது யோக ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். இந்நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து உற்சவர் தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை உற்சவர் பக்தோசித பெருமாள் ஊர் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை காலை சேஷ வாகனத்திலும்,

இரவு சிம்ம வாகனத்திலும், 13ம்தேதி காலை ஹம்ச வாகனத்திலும், இரவு ஹேமகோடி விமானமும், 14ம் தேதி காலை சூரியபிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும், 15ம் தேதி நாச்சியார் திருக்கோல பல்லக்கிலும், நள்ளிரவு தங்க கருட வாகனத்திலும், 16ம் தேதி அறுபத்து வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 17ம் தேதி  நடைபெறுகிறது. 18ம் தேதி குதிரை வாகனமும், 19ம்தேதி வேடுபறி உற்சவமும், இரவு தீர்த்தவாரியும், 20ம்தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கமும், இதைத்தொடர்ந்து 3 நாட்கள் விடையாற்றி உற்சவமும், 24ம் தேதி திருமஞ்சனம், கண்ணாடி பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sholingar Lakshmi Narasimha Swamy Temple Chithirai Brahmmotsavam ,Glorious Ceremonies: Massive Devotees Darshan , Sholingar, Lakshmi Narasimha Swamy Temple, Chithra Brahmotsavam
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...