×

ஜெட்ஏர்வேஸ் சர்வதேச விமானங்கள் ரத்து

மும்பை : இன்று இரவு வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜெட்ஏர்வேஸ் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.நாளை புறப்படவிருந்த மும்பை - கொல்கத்தா - குவகாத்தி விமானங்களும் ரத்து செய்யப்படுகிறது. விமானங்கள் ரத்தாவதால் பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜெட்ஏர்வேஸ் கட்டணத்தையும் திருப்பி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flights ,Jet Airways International , Jet Airways ,suspended , international flights ,tonight, operational reason.
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...