×

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு

வேலூர்: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் அரக்கோணம் மக்களவை தொகுதியில் உள்ள காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நாளை வேலூர் மக்களவை ெதாகுதிக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 18ம்தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்ேதர்தல் நடக்கிறது. இதனையொட்டி, வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகள் மற்றும் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 3,456 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 18,848 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் கடந்த 8ம்தேதி நடந்த பயிற்சி முகாமின்போது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். விடுபட்டவர்கள் வரும் 13 மற்றும் 17ம் தேதிகளில் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு வேலூர் நேதாஜி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. அரக்கோணம் தொகுதியில் உள்ள உள்ளூர் போலீசார் 412 பேர், ஆயுதப்படை போலீசார் 203 பேர், காவலர் பயிற்சி பள்ளி போலீசார் 10 பேர், ஊர்க்காவல் படையினர் 119 பேர், தீயணைப்பு வீரர்கள் 4 பேர், வனத்துறையினர் 3 பேர் என்று மொத்தம் 751 பேருக்கு தபால் வாக்கு உள்ளது. இவர்கள் இன்று காலை தபால் வாக்களித்தனர்.  வேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் போலீசார் 599 பேர், ஆயுதப்படை போலீசார் 289 பேர், காவலர் பயிற்சி பள்ளி போலீசார் 17 பேர், ஊர்க்காவல்படையினர் 209 பேர், தீயணைப்புத்துறையினர் 3 பேர், வனத்துறையினர் 4 பேர் உட்பட மொத்தம் 1,121 பேர் வாக்களிக்க உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை உட்பட மொத்தம் 1,872 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voting ,Vellore Netaji Stadium , Vellore, Netaji Stadium, Police and postal voting
× RELATED சென்னையில் வாக்கு இயந்திரங்கள்...