×

இந்திய தேர்தலில் தலையிட இம்ரான்கானுக்கு உரிமை இல்லை : மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி கண்டனம்!

ஐதராபாத் : இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான்கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இம்ரான்கானுடன், மோடி ரகசிய உடன்பாடு வைத்திருந்ததாகவும், அது தற்போது தெரியவந்துள்ளது என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி இன்று வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என அவர் கூறியுள்ளார். தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Imran Khan ,Owaisi ,elections ,Indian ,Majlis , Indian Election, Imran Khan, Majlis Party, Owaisi
× RELATED நாடாளுமன்றத்தில் முஸ்லிம்...