ஆவணங்கள் வெளியிட்ட விவகாரம்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்தது இங்கிலாந்து போலீஸ்

பிரிட்டன்: ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார். அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தன் இணையத்தளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார். இதனால், சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சேக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது. இதனால் விதிக்கப்பட்ட  மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்தார். ஈகுவேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

அவர் வென்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித், அசாஞ்சே காவல்துறையின் காவலில் இருப்பதாக ட்விட்டர் மூலம் உறுதிபடுத்தினார். ஈகுவேடார் தூதரகத்திற்குள் ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பின், ஜூலியன் அசாஞ்சே இப்போது போலீஸ் காவலில் உள்ளார். இங்கிலாந்தில் சரியான முறையில் நீதிகளை எதிர்கொள்கிறார். நான் ஈகுவேடார் அதன் ஒத்துழைப்பிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, என சாஜித் ஜாவித் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Julian Assange ,WikiLeaks ,UK , Documents, WikiLeaks founder Julian Assange, arrested, UK Police
× RELATED விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன்...