×

நாடாளுமன்ற தேர்தல்: ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல்

ரேபரேலி: ரேபரேலி மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் அனைத்துக் கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மே 6-ம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது பாரம்பரிய தொகுதியான ரேபரேலி மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக சோனியா காந்தி, டெல்லியில் இருந்து ரேபரேலி வந்தார். பின்னர், 700 மீட்டர் தூரம் தொண்டர்கள் புடை சூழ பேரணியாக சென்ற சோனியா காந்தியையும், அவரது குடும்பத்தினரையும் தொண்டர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். பின்னர் ரேபரேலி உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை ராகுல் தாக்கல் செய்தார். அப்போது, சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்த ரேபரேலி தொகுதியில் 1999-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ரேபரேலியில் 1977, 1996, 1998 ஆகிய 3 தேர்தலைகளைத் தவிர, மற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Sonia Gandhi ,Rae Bareli , Parliamentary election, Rae Bareilly, senior Congress leader Sonia Gandhi, petition
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...