×

கடலாடி கோயில் விழாவில் மழை வேண்டி உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்

சாயல்குடி: கடலாடி கோயில் விழாவில் சேத்தாண்டி வேடமிட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் யாக சாலைகள் வளர்க்கப்பட்டு விழா தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, கொலுமாவு பூஜை, காவு கொடுத்தல் பூஜை ஆகியவை நடந்தது.

தினந்தோறும் பெண்கள் கும்மி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், ஆடியும் உற்சாகமாக ஒரு வாரம் திருவிழா கொண்டாடினர். இதில் பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மழை வேண்டி ஆண்கள் உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு சேத்தாண்டி வேஷம் போட்டு ஊர்வலமாக வந்தனர். கொடியிறக்கத்துடன் நேற்று திருவிழா நிறைவடைந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees , kadalaadi, temple festival, devotees
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்