மந்தமான சென்னை ஆடுகளம்...... விளையாட விரும்பாத டோனி

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், ஆடுகளம் சரியில்லை என கேப்டன் டோனி அதிருப்தி தெரிவித்தார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் ரன்வேகம் மந்தமாக உள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள போட்டிகளின் சராசரி ரன்ரேட் 6.57 வேறு எந்த மைதானத்திலும் ரன்ரேட் 7-க்கு கீழாக இருந்ததில்லை. ஏற்கனவே பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது டோனி ஆடுகளம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் குறித்து டோனி கூறியதாவது: ‘பெங்களூரு அணி 70 ரன்னில் சுருண்டது போலவே கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி அமைந்து விட்டது. ஆடுகளம் குறித்து புகார் கூறிக்கொண்டே வெற்றியும் பெற்று விடுகிறோம். இது போன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் இங்கு மிகவும் குறைந்த ஸ்கோரே எடுக்க முடிகிறது. எங்களது வீரர்களுக்கும் இந்த ஆடுகளத்தில் ரன்கள் எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட் செய்தால் சிரமம் அதிகம். பனிப்பொழிவினால் பிற்பகுதியில் ஓரளவு பேட்டிங்குக்கு எளிதாக இருக்கிறது’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhoni , Chepauk, pitch, MSD , IPL
× RELATED முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம்...