×

குறை சொல்பவர் கமல் பாராட்டுபவர் ரஜினி: கொளுத்திப்போடுகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரஜினி வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஜினி ஒரு மனசாட்சி உள்ள மனிதர். நல்லதை பாராட்டக் கூடியவர். நீட் தேர்வை பாஜ அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்கும்போது, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உரிய அழுத்தம் கொடுக்கப்படும். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்வது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார். தமிழகம் முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், கோடைக்காலத்திலும், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. சினிமாவில் எழுதிக் கொடுத்ததை பேசி நடித்தவர் கமல். அவர் குறை சொல்லியே பழக்கப்பட்டவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini , Kamal, Rajini, Rajendra Palaji
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...