×

500, 1000 தந்தா வாங்காதீங்க.. 5000, 10ஆயிரமா வாங்குங்க..: இளங்கோவன் தடாலடி

திமுக கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியதாவது: பணம் கொடுக்கும் வேட்பாளரிடம் இருந்து மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு கை சின்னத்துக்கு தான் கண்டிப்பாக வாக்களிப்பார்கள். மக்களே 500, 1,000 கொடுத்தால் வாங்க வேண்டாம். ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கிக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு நாமம் போடுங்கள். ஐந்து ஆண்டுகளாக அவர்கள் உங்களை நாமம் போட்டார்கள். இந்த முறை நீங்கள் அவர்களுக்கு நாமத்தை திருப்பிக்கொடுங்கள். தேனி மாவட்டத்திற்கு மிகப்பெரிய பிரச்னையே ஓ.பன்னீர்செல்வமும் அவருடைய மகனும் தான். தற்போது தேர்தல் ஆணையம் பாஜவிற்கும் அதிமுகவிற்கும் ஜால்ரா போடும் ஆணையமாக இருந்து வருகிறது.

போலீஸ் வாகனம், ஆவின் பால் வாகனம் மூலம் பணம் கொண்டு செல்லப்படுகிறது. இதனை ஏன் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே வெற்றி உறுதியாகி விட்டது. கிராம மக்கள் ராகுல் காந்தியை பார்க்க நினைக்கிறார்கள். அவரது வருகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது தனி விமானத்தில் எம்ஜிஆரை அமெரிக்கா அனுப்பி உயிரை காத்தார். இபிஎஸ், ஒபிஎஸ் இப்போது மோடியை டாடி என்கின்றனர். இந்த இருவரும் நினைத்திருந்தால் மோடி மூலமாக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம். ஐந்தாண்டு கால மோடி, 7 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சிகளில் தமிழகம் வளர்ச்சியடையவில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ilangovan,dmk,congress
× RELATED அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக...