×

ஹர்பஜன், தாஹிர் ஓல்டு ஒயின் மாதிரி... டோனி பாராட்டு

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் (38 வயது), இம்ரான் தாஹிர் (40 வயது) இருவரும் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்திலும் இவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இது குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:

நாட்கள் ஆக...ஆக... ஒயினின் சுவையும் மதிப்பும் கூடிக் கொண்டே போகும். ஹர்பஜன், தாஹிர் இருவரும் ஓல்டு ஒயின் போல தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.அவர்களின் அனுபவ முதிர்ச்சி பந்துவீச்சில் பிரதிபலிக்கிறது. ஹர்பஜன் களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்து வருகிறார்.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் மிகுந்த நம்பிக்கையுடன் அணுகுவது தாஹிரை தான். என் மீது அவரும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவரது பிளிப்பர் வகை பந்துவீச்சு மிக நன்றாக எடுபடுகிறது. மொத்தத்தில் எங்கள் அணியின் பந்துவீச்சு பலம் திருப்தியளிக்கிறது. அதே சமயம், ரன் குவிப்புக்கு சாதகமான சிறிய மைதானங்களில் விளையாடும்போது யாரை களமிறக்குவது என்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harbhajan ,Tahir Old Wine , Harbhajan, Tahir, Old Wine, Tony, compliment
× RELATED சூர்யகுமார் தலைமையில் டி20 அணி: ஹர்பஜன் யோசனை