×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் சாய்னா: சிந்து முன்னேற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். முதல் சுற்றில் இந்தோனேசியாவின் யூலியா யோசபினுடன் நேற்று மோதிய சாய்னா 21-16, 21-11 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-9, 21-7 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் லயனி அலெசாண்ட்ரா மைனாகியை வீழ்த்தினார்.

சிந்து தனது 2வது சுற்றில் மியா பிளிச்பெல்ட்டுடன் (டென்மார்க்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 21-6 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சுப்பன்யு அவிகிங்சனனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 11-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டஸை 1 மணி, 3 நிமிடம் போராடி வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி - பிரணவ் ஜெர்ரி சோப்ரா இணை 21-18, 21-7 என்ற நேர் செட்களில் அர்ஜுன் - மனீஷா ஜோடியை வீழ்த்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saina ,round , Singaporean, Open Badminton, Saina, Sindhu progress
× RELATED கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை...