×

கோஹ்லி, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்

லண்டன்: இங்கிலாந்தில் வெளியாகும் பிரபல இதழான ‘விஸ்டன்’ சார்பில் கடந்த ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரர், வீராங்கனையாக இந்தியாவின் விராத் கோஹ்லி, ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து 3வது ஆண்டாக இந்த கவுரவத்தை பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.  2018 சீசனில் கோஹ்லி விளையாடிய சர்வதேச போட்டிகளில் 2735 ரன் குவித்தது  (சராசரி 68.37) குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்த இடத்தை பிடித்த  இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை விட கோஹ்லி 700 ரன் கூடுதலாக எடுத்துள்ளார்.

2018ம் ஆண்டின் தலை சிறந்த 5 வீரர்களுக்கான விஸ்டன் பட்டியலிலும் அவர் இடம் பிடித்து இம்முறை இரட்டை விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை டாமி பியூமான்ட், இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரன், சர்ரே அணி கேப்டன் ரோரி பர்ன்ஸ் மற்றும் விராத் கோஹ்லி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். டி20 போட்டிகளில் உலகின் தலை சிறந்த வீரராக ஆப்கன் சுழல் ரஷித் கான் தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, கடந்த சீசனில் விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 13 அரை சதம் உட்பட 1291 ரன் விளாசியதை தொடர்ந்து, உலகின் முன்னணி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,Wisden ,Mandana , Kohli, Mandana, Wisden, Honor
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு