×

அய்யய்யோ.. என்னோட மோதிரத்தை விடுங்கய்யா...’கார்த்திக்கை கதற விட்ட அதிமுக தொண்டர்

தேவாரத்தில் பிரசாரத்திற்கு வந்த நடிகர் கார்த்திக்கின் மோதிரத்தை, அதிமுக ெதாண்டர் உருவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய, மனித உரிமைகள் காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் நேற்று முன்தினம் தேனி மாவட்டத்துக்கு வந்தார். தேவாரத்தில் அவர் பிரசாரம் செய்தபோது தேவர் சிலை அருகே அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.
கார்த்திக்கிற்கு பிரசார ஜீப் வழங்கப்படாததால், வேனில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்தார். ஆர்வமிகுதியில் வேனின் கண்ணாடியை இறக்கி விட்டு கையை அசைத்தார். அப்போது அதிமுக தொண்டர்கள் இவரது கையை பிடித்து இழுக்க ‘‘ஐயோ...’’ என்றார்.

தொடர்ந்து ‘‘அன்பான வாக்காள பெருமக்களே’’ என தொடங்கும்போதே இவரது விரலில் போட்டிருந்த மோதிரத்தை தொண்டர்கள் இழுத்தனர். ‘‘அய்யோ.. மோதிரம்.. மோதிரத்தை கொடுங்கய்யா’’ என அலறினார். இதனால் பிரசார கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின் அதிமுக தொண்டரிடம் இருந்து மோதிரத்தை வாங்கி கார்த்திக்கிடம் வழங்கினர். அதன்பிறகே அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.‘‘ராசியான மோதிரம். நல்ல வேளை கிடைச்சுருச்சு’’ என்று உடனிருந்தவரிடம் கூறிய கார்த்திக், அடுத்தடுத்து நடந்த பிரசாரத்தில் எல்லாம் வேனிற்குள் இருந்தபடியே ஒரு சில நிமிடங்கள் பேசினார். ரசிகர்களில் சிலர், ‘‘உள்ளே இருந்து பேச வேண்டாம். வெளியே வந்து பேசுங்கள்’’ என சப்தம் போட, அதை கண்டுகொள்ளாமல் கார்த்திக் ‘எஸ்கேப்’ ஆனார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthikeyan ,AIADMK , Karthik, Kathra, AIADMK, Volunteer
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...