×

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தமாகா முன்னாள் எம்எல்ஏ அசன்அலி காங்கிரசில் ஐக்கியம்

சென்னை: அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்தது பிடிக்காததால் தமாகா முன்னாள் எம்எல்ஏ அசன் அலி நேற்று காங்கிரசில் இணைந்தார். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமாகாவுக்கு நீண்ட இழுபறிக்கு பின்பு தஞ்சாவூர் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டவர்கள் தமாகாவில் இருப்பதால் அவர்கள் பாஜ உடனான அதிமுக கூட்டணியில் தமாகா இணைந்ததை விரும்பவில்லை. இந்த கூட்டணிக்கு பின்பு தமாகாவில் இருந்து பலர் விலகி பல்வேறு கட்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் எம்எல்ஏவாக இருந்த அசன் அலி தமாகாவில் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

கூட்டணியில் இருந்ததால் பிரதமர் மோடியை எதிர்த்து பேசி வந்த அவர் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் வந்தார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து காங்கிரசில் இணைந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கூடா நட்பு கேடாய் முடியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் கூறினேன். ஆனால் அவர்கள் பாஜ கூட்டணியில் போய் இணைந்தார். அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தமாகாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து விட்டேன்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TNA ,MLA ,Asan Ali ,AIADMK ,coalition , TMC, MLA Asan Ali, CONGRESS
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...