×

தொண்டர் கொடுத்த எலுமிச்சையை பயத்துடன் திருப்பி கொடுத்த நிகில்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தேர்தலில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மஜத வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்காக தந்தை குமாரசாமி, தாய் அனிதா குமாரசாமி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள், அமைச்சர்கள் என்று ஒரு பட்டாளமே ரவுண்ட் கட்டி பிரசாரம் செய்து வருகிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பம் ஆன்மிக சென்டிமென்டானது. ஒவ்வொரு நாள் பிரசாரத்தின்போது ஏதாவது கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டுதான் பணியை தொடங்குவார்கள்.

இந்நிலையில் மண்டியா கே.ஆர்.நகர், ஹெப்பால் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக அமைச்சர் சாரா மகேஷ் அவருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். அப்போது சாலையில் மக்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்து இருந்தனர். இதில் ஒருவர் நிகில் குமாரசாமி மீது பிரியப்பட்டு தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் 4 எலுமிச்சை பழத்தை அவருக்கு கொடுத்தார். அதை தயக்கமின்றி வாங்கிய நிகில் குமாரசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை.... பதட்டத்துடன் அந்த பழங்களை மீண்டும் கொடுத்த தொண்டர் கையிலேயே கொடுத்துவிட்டார். இதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nikhil , Nikhil,volunteer, lemon
× RELATED உடல்நிலை தேறிய நபா நடேஷ் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்