×

தேர்தல் ஆணையம் ஒருதலைக்காதல்... சந்திரபாபு நாயுடு தர்ணா

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு  மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதியை கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று  நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்களை வழங்கினார். பின்னர் அலுவலகத்தின் வெளியே  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து முதல்வர் கூறியதாவது:தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல்  நேர்மையாக பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முதன்மை செயலாளர் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் தெலுங்கு தேசம்  கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் மட்டுமே  உள்ளனரா? ஏன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்  வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை.  தெலங்கானாவில் பாஜவை சேர்ந்த நிர்வாகி ₹8 கோடியை வங்கியில் இருந்து எடுக்க முடிந்தது. சாதாரண மக்கள் யாரும் ₹20 ஆயிரத்துக்கு மேல்  எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சரித்திரத்தில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையத்தின் மீது ஆளும் கட்சியை சேர்ந்த முதல்வரே  புகார் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission , Election Commission, Unilivable, Chandrababu Naidu ,Dharna
× RELATED காலியாக உள்ள 18 இடங்களுக்கான...