×

பாம்பு நடனமாடிய அமைச்சர்: தேர்தல் பிரசாரத்தில் உற்சாகம்

கர்நாடக  மாநிலம்,  ஒசகோட்டையை சேர்ந்தவர் எம்.டி.பி நாகராஜ்.  காங்கிரசை சேர்ந்த இவர் தற்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பு   வகித்து வருகிறார். தற்போது, மக்களவை தேர்தலையொட்டி, தனது கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  ஒவ்வொரு  இடங்களுக்கும் இவர் சென்று வாக்கு சேகரிக்கும்போது, மக்களோடு மக்களாக  கலந்து விடுவார். மேலும், வாக்காளர்களை கவரும் நோக்கில் ஏதேனும்  புதிதாக ஒன்றை செய்து மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துவிடுவது இவரது  வழக்கம்.  நேற்று தனது கட்சியை சேர்ந்த சிக்கபள்ளாபுரா மக்களவை தொகுதி வேட்பாளர் வீரப்ப மொய்லியை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டார்.  

ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்த அவர் கட்டேனஹள்ளி  பகுதியில் வந்தபோது, மிகவும் சுறுசுறுப்பு அடைந்தார். மேளதாளங்களின்  இசை கச்சேரி களைகட்டியதும்,  வாக்காளர்கள் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, நாகராஜனை  மிகவும் கவர்ந்தது. வாலிபர்களுடன் நடனம் ஆட  தொடங்கினார். நாகினி நாடகத்தில் வரும் நாக பாம்பு போன்று வளைந்து நெளிந்து,  நடனம் ஆடி, மக்களை மிகவும் கவர்ந்தார். அவருடைய நடனம்,  சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Snake dancer minister , Snake dancer, minister
× RELATED 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி...