×

ம.பி.யில் உச்சகட்ட கோஷ்டி பூசல்: பாஜவின் கோட்டை சரிகிறது

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மத்தியப் பிரதேச பாஜ சிட்டிங் எம்.பிக்களும் சில மூத்த தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட  மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களை எப்படி சமாளிப்பது என பாஜ திணறிவருகிறது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜ இதுவரை அறிவித்துள்ளது. இதில் 3  சிட்டிங் எம்பி.க்கள் மற்றும் சில மூத்த தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில்,  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யாமல் அதிருப்தியாளர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். சிலர் கட்சி வேட்பாளர்களை  எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். ஷாதோல் மக்களவை தொகுதி சிட்டிங் எம்.பி கியான் சிங் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு போட்டியிட  வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஷாதோல் பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டேன்’’ என  வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதேபோல பாலகாட் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்து ஏமாற்றமடைந்த சிட்டிங் எம்.பி பஹத் போத்சிங்கோ,  சுயேச்சையாக  போட்டியிட்டு பாஜ வேட்பாளரை மண்ணை கவ்வ செய்வேன் என சூளுரைத்துள்ளார். மண்டசூர், சித்தி, பிந்த், மொரேனா உட்பட 10க்கும்  மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் கட்சிக்கு எதிராக பாஜ.வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் பல  தொகுதிகளில் தொண்டர்களும் பிரசாரங்களை புறக்கணித்து வருகின்றனர். கடந்த தேர்தல் வரை பாஜ.வின் கோட்டை என கருதப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரசின் கை ஓங்கி வருகிறது.  எப்படியாவது 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஜெயித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டி காங்கிரஸ் தலைவர்கள் வேலை செய்து வருகின்றனர்.  இதை சமாளிக்க வழி தேடி வருகிறது பாஜ.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,UP ,fort , clash , climax, UPA,f Bhaj ,collapsing
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...