மோடி ஆட்சியில் முதலில் தண்டனை பிறகுதான் விசாரணை: ப.சிதம்பரம் தாக்கு

தமிழகத்தில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ‘முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட  இவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கமிட்டி தலைவர்’ என்று விமர்ச்சித்தார்.

இதற்கு பதிலடியாக டெல்லியில் சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி அரசில் முதலில் தண்டனை. பிறகுதான் விசாரணை. சம்பந்தப்பட்ட  நபர் தன்னை அப்பாவி என நிரூபிக்கும் வரை அவர் குற்றவாளியாக கருதப்படுகிறார். சட்டத்தின் சில அடிப்படை விஷயங்களை பிரதமருக்கு சட்டச்  செயலாளர் சொல்லித்தர வேண்டும். ஜாமீனில் விடுவது சட்டத்துக்கு உட்பட்டது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : ப.சிதம்பரம்