×

தலாய் லாமா உடல்நிலை தேறி வருகிறார்

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலாய் லாமாவின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா, கடந்த 8ம் தேதிதான் தர்மசாலா திரும்பினார். இந்நிலையில், அவர்  மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து  வரப்பட்டார்.

இதுகுறித்து அவரை கண்காணிக்கும் மருத்துவர்கள் குழு கூறிய போது, `இதயத்தில் தொற்று காரணமாக தலாய் லாமா இங்கு கொண்டு  வரப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு அவர் சிகிச்சை பெற உள்ளார். தற்போது அவரது உடல்நிலை  சீராக உள்ளது’ என்று தெரிவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dalai Lama , Dalai Lama , getting ,sick
× RELATED அடுத்த தலாய்லாமா நியமிக்க சீனாவை...