ரோகிணி பகுதியில் பெண் கொலை: பக்கத்துக்கு வீட்டு பெண் உட்பட 3 பேர் கைது

புதுடெல்லி: ரோகினி செக்டார் -16 பகுதியில் பக்கத்து வீட்டை பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட  புகாரில், 25 வயது பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோகினியில்,   வசித்த பெண் கீதா சக்சேனா,இவர்  கடந்த திங்களன்று நண்பகல் 1.30 மணியளவில் தனது வீட்டில்  கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவரது கர்சீப்பை கொண்டு கழுத்து இறுக்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் விகார் பகுதியை சேர்ந்த  சுமித்குமார்(22), விகாஷ்குமார்(25) மற்றும் ரூபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வீட்டில் பெண் ஒருவர் இறந்து கிடப்பது பற்றி தகவல் கிடைத்து. இதையடுத்து, அங்கு போலீசார் விசாரணை நடத்த சென்றபோது வீடு  திறந்தநிலையில் இருந்தது. மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், போலீசாருக்கு விசாரணையின் போது சுமித், ஆசு  மற்றும் விகாஷ் என்கிற மூன்று பேர்  பற்றிய தகவல் கிடைத்தது. அவர்களை  பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து ரோகினி செக்டார் 24 பகுதியில் செவ்வாயன்று மாலை இருவரும் கைது  செய்யப்பட்டனர். நேற்று காலை ரூபியும் கைதானார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணை கொலை செய்தததை ஒப்புக்கொண்டனர். இதுபற்றி துணை கமிஷனர் கூறியதாவது: ரூபி பண கஷ்டத்தில் இருந்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்பட்டதால் கீதா சக்சேனா பற்றி சுமித்திடம்  ரூபி தெரிவித்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்காக கீதா நிறைய பணம் செலவு செய்ததை கூறி, அவரிடம் நிறைய பணம் இருப்பது, அதனை கொள்ளையடிக்க  வேண்டும் என்பதையும் ரூபி கூறியுள்ளார். ரூபி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது கணவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் திட்டபடி, ரூபி சக்சேனா வீட்டிற்கு முதலில் செல்ல  வேண்டும். அங்கு சென்ற பின் மற்ற இருவருக்கும் ரூபி மிஸ்டு கால் கொடுப்பார். அதனை பார்த் உடன் மற்ற இருவரும் அங்கு செல்ல வேண்டும்.

திட்டதின்படியே, திங்களன்று நண்பகல் 12 மணிக்கு அனைவரும் சக்சேனா வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு  இருந்தார். உள்ளே நுழைந்த மூவரும் வீட்டில் இருககும் நகை, பணம் அனைத்தையும் கொடுக்குமாறும், சத்தம் போடக்கூடாது என்றும் மிரட்டி  உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் நான்கு பேரும் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அதன்பின்னர் சக்சேனாவின் கழுத்தில் இருந்த செயின், மோதிரம், வளையல் மற்றும் வீட்டில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து  சென்றனர். இவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசு என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தேடி  வருகிறோம். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More