தங்கம் கடத்திய சீனா நபர் கைது

புதுடெல்லி: நாட்டிற்குள் 23 லட்சம் மதிப்பு தங்கம் கடத்த முயன்ற சீனா நபர் ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.ஹாங்காங்கில் இருந்து நேற்று வந்த விமானத்தில் பயணித்த சீனா நபர், இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் வழக்கப்படியான சோதனைக்கு வரிசையில்  நின்றிருந்தார். அவரது முறை வந்த போது, தனது உடலிலும், உடைமைகளிலும் ஒரு தங்க செயின், தங்க கட்டி, மற்றும் தங்க வளையல் என 734  கிராம் எடைக்கு அவர் தங்கம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த மொத்த தங்கத்தையும் சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்து, பாதுகாப்பு பெட்டக அறைக்கு அனுப்பி  வைத்தனர்.முக்கால் கிலோ எடை கொண்ட பறிமுதல் தங்கத்தின் விலை ₹23 லட்சத்து 63 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போலீஸுக்கு  தகவல் கொடுத்து சீனா நபரை கைது செய்ய வைத்தனர்.   பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சீனாபுரம் கொங்கு வேளாளர்...