×

தேசிய வாக்குறுதியுடன் டெல்லிக்கு தனி தேர்தல் அறிக்கை: ஷீலா தீட்சித் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அறிவித்த தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி, மாநிலத்தின் உள்ளூர் பிரச்னைகளுக்கு  முக்கியத்துவம் அளித்து  டெல்லி மாநிலத்திற்கு தனி தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்களை கண்டறிந்து  அவர்களுக்கு ஆண்டுக்கு ₹72,000 உதவி தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி மாநிலத்திற்கு என காங்கிரஸ் கட்சி தனி தேர்தல் அறிக்கையை வெளியிடும் என அக்கட்சியின் டெல்லி மாநில தலைமை  கூறியுள்ளது.

இதுபற்றி டெல்லி மாநில காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர குமார் கோச்சார் கூறுகையில், “டெல்லி மாநிலத்திற்கு என தனி தேர்தல்  அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிடும்.  மாநிலத்தின் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் வாக்குறுதிகள்  அடஙகிய புத்தகம் வெளியிடப்படும். அதில், தேசிய தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த நியாய் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் சாரம்சத்தை தாங்கி வரும். இதுதவிர,  டெல்லியில் உள்ள காற்றுமாசு, சீலிங் நடவடிக்கை,சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”  என்றார்.இந்நிலையில், செவ்வாயன்று டெல்லி மாநில தலைவர் ஷீலா தீட்சித்,  தனதுகட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது தேசிய அளவிலும், மாநில அளவிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்களிடம்  பிரசாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிர்வாகிகளிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மையப்படுத்தப்பட்ட தனிநபரை தூக்கி பிடிப்பதை போன்றதல்ல.  அனைத்து தரப்பு மக்களின் தேவைகள், பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட  வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள, மட்டுமின்றி அனைத்து தரப்பு  மக்களின் விருப்பம், தேவை  ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. எனவே, கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று காங்கிரஸ்  கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது, பொய்களை மட்டுமே தாங்கி வரும்  பாஜ தேர்தல் அறிக்கையை போன்றதல்ல காஙகிரஸ். அனைத்தும் நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை அளித்துள்ளோம் என்பதை எடுத்துவ்கூற  வேண்டும். இவ்வாறு தீட்சித் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,announcement ,Sheila Dikshit , national promises,election report, Delhi, Sheila Dikshit
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...