×

உலக சுகாதார நிறுவன ஆய்வு உலகின் 15 மாசு நகரங்களில் இந்தியாவில் 14 உள்ளது: 3, 6வது இடத்தில் வாரணாசி, டெல்லி

புதுடெல்லி: உலகளவில் மாசு பாதிப்பு மோசமான நகரங்கள் வரிசையில் முதல் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்து உள்ளது.கிளைமேட் டிரென்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தால், ‘2014 - 2019ம் ஆண்டுகளில் இந்திய காற்று தரம் குறித்து அரசியல் தலைவர்களின் பதவி  மற்றும் செயல் திறன்’, எனும் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட மோசமான மாசு நகரங்கள் ஒப்பீடு  செய்யப்பட்டு, நிலைமைக்கு காரணமானவர்களை கடுமையாக தொண்டு நிறுவனம் சாடியுள்ளது.தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள்:உலகின் மோசமான மாசு நகரங்கள் பட்டியலின் முதல் 15 இடங்களில் இந்தியாவின்14 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின்  தொகுதியான வாரணாசி 3ம் இடம் பிடித்துள்ளது. தொகுதியை மிளிர வைப்பேன் எனக் கூறி, வாரணாசியில் பிரதமர் மோடி பழைய கட்டடங்கள்  இடித்தும், புதிய கட்டடங்களை கட்டும் பணியை அசுர கதியிலும் மேற்கொண்டு வருவதால், அங்கு எங்கு பார்த்தாலும் புழுதிப்படலமாக உள்ளது.  காசியில் சுவாசக்கோளாறு, ஆஸ்த்மா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை டாக்டர்களும் உறுதி செய்துள்ளனர்.

வாரணாசி உருக்குலைந்து  வருகிறது.டெல்லியிலும், அரசியல்வாதிகளின் சோம்பேறித்தனத்தால் காற்று மாசு நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மக்களால் தேர்வு செயய்ப்பட்ட மாநிலத்தின் 7 தொகுதி எம்.பிக்கள், 70 எம்எல்ஏக்கள், மற்றும் மாநகராட்சி, நகராட்சி, கன்டோன்மெண்ட் கவுன்சிலர்களின்  அலட்சிய போக்கு, கவனக்குறைவு மற்றும் மெத்தனம் காரணமாக தலைநகரம் மாசுவால் பாதிக்கப்பட்டு உள்ளது. மாசுவை குறைக்கக் கூடிய ஆக்கபூர்வ  பணிகள் டெல்லியில் நடைபெறவில்லை என்பது கண்கூடான உண்மை. அதற்கு அரசியல்வாதிகளே காரணம். அவர்களது சோம்பலால், மக்களின்  சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Health Organization ,world ,cities ,India ,Varanasi ,Delhi , World Health, Organization study, world India,Varanasi, Delhi,
× RELATED சில்லி பாயின்ட்…