×

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை பிஎம்டபிள்யு காரில் இருந்து 1 கோடி ரொக்கம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச்செல்லப்பட்டதா?

புதுடெல்லி: தெற்கு டெல்லி வசந்த் விகார் பகுதியில் பிஎம்டபிள்யு சொகுசு காரிலிருந்து ₹1 கோடி ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து தலைநகரின் முக்கிய பகுதிகளில் தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக, வாக்காளர்களுக்கு பணம் வழங்க வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பது குறித்து முக்கிய  சாலை சந்திப்புகளில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி, வசந்த் கஞ்ச் பகுதியில் பூர்வி மார்க்கில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வந்த பிஎம்டபிள்யு கார் ஒன்றை மடக்கி  சோதனையிட்டதில், அதில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட ₹1 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்ததாக தென்மேற்கு டெல்லி துணை கமிஷனர்  தேவேந்தர் ஆர்யா தெரிவித்தார். பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறைக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து செல்லப்பட்டதாக என்கிற கோணத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Vehicle Vehicle Vehicle Inspection ,BMW , Election Flying,Force Vehicle Test,BMW car, voters?
× RELATED ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார் வாங்கிய விஜய்