×

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு அட்டாக் பாண்டி கூட்டாளி 2 பேர் நீதிமன்றத்தில் சரண்: மதுரை சிறையில் அடைப்பு

மதுரை: தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 2 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது கடந்த 2007, மே 9ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் இறந்தனர்.  இவ்வழக்கில் அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன் (எ) காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடந்த மாதம் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளில் 5 பேர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 29ம் தேதி சரணடைந்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தேடப்பட்டு வந்தவர்களில் விஜயபாண்டி, திருமுருகன் (எ) காட்டுவாசி முருகன் ஆகிய 2 பேர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். நீதிபதி நசீமா பானு உத்தரவின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dinakaran ,Atta Pandey , Dinakaran, office, flame case, Attak Pandi, Madurai jail, shutters
× RELATED இருப்பவல் திருப்புகழ்