×

துபாய் விமான நிலையத்தில் பராமரிப்பு பணி வேறு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்க மாற்று ஏற்பாடு

துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 16ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை எமிரேட்ஸ் நிறுவன விமானங்கள் தவிர்த்து மற்ற அனைத்து  விமானங்களும் துபாய் நகரத்தை ஓட்டிய ஜெபல் அலி பகுதியில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செயல்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சூடான், ஜோர்டான், சவுதி அரேபியா, நேபாளம்  உட்பட 42 விமான நிலையங்களுக்கான விமான சேவைகளை இந்த குறிப்பிட்ட காலங்களில்  ஜெபல் அலி  பகுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக துபாயிலிருந்து இயங்கும் ப்ளைதுபாய் நிறுவனம் அறிவித்து விட்டது.

எமிரேட்ஸ் விமானங்கள் வழக்கம்போல் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எமிரேட்ஸ் விமானங்களின் நேரங்களில் மாற்றம், சில விமான சேவைகள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை காட்டிலும் 25 சதவீதம் குறைவாக இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த 45 நாட்களில் வெளிநாட்டிலிருந்து துபாய் செல்லும் வெளிநாட்டினர் இத்தகவலை அறிந்து கொண்டால் சிரமங்களை தவிர்க்கலாம்.  ஏனென்றால் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் விமான நிலையம், துபாய் விமான நிலையத்திலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயணிகளின் பொருளாதார சிரமத்தை குறைக்கும் வகையில் ஜெபல் அலி விமான நிலையத்திலிருந்து செல்லும் துபாய்  டாக்சிகளுக்கான  குறைந்தபட்ச ஆரம்ப தொகையை 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Operations ,Dubai Airport ,airport ,flights , Dubai Airport, Airport, Flights
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்