×

பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர்: வாலிபர் கைது

ஜோலார்பேட்டை: பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்  மனைவி சுகன்யா(26), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2ம்தேதி சுகன்யாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்தபோது எதிர்முனையில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுகன்யா தொடர்பை துண்டித்தார். ஆனால் அந்த நபர், சுகன்யாவின் செல்போனுக்கு ஒரு ஆபாச படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா நேற்று ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி வழக்குப்பதிந்து ஆபாச படம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார். அதில் பேரணாம்பட்டு மசூதி தெருவை சேர்ந்த  ஹைத்பாஷா(25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹைத்பாஷாவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Darjeeling , Girl, porn movie, torchter, young man arrested
× RELATED டார்ஜிலிங்கில் வாக்கிங் பானி பூரி தயாரித்த மம்தா