×

100 சதவீத வாக்குப்பதிவு கோரி 3 சக்கர வாகன பேரணி: இரணியலில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திங்கள்சந்தை: குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மூன்று சக்கர வாகன பேரணி நடந்தது. இரணியல் அரசு நடுநிலை பள்ளி அருகில் தொடங்கிய பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் கதிர்வேலு, மற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறை அலுவலர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் ஏஎஸ்பி கார்த்திகேயன், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுபாதம், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன்,  மாற்றுதிறனாளிகள் சங்க நிர்வாகி வேலுமயில் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் 6 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து ெகாண்டனர்.

பேரணி கண்ணாட்டுவிளை, முத்தலக்குறிச்சி வழியாக தக்கலை மேட்டுக்கடையை அடைந்தது. பேரணியில் சென்றவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும்  துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rally ,Collector ,Ranil , 100 percent turnout, wheel rally
× RELATED மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் வாகன...