×

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்து வருத்தம்

லண்டன் : ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார். அமிர்தசரஸ் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என 379 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டிஷ் அரசின் மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர்.

ஆனால், தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி, ஆயிரம் பேர் கொல்லப்பட்டது உறுதியானது. இந்நிலையில் இன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசு சார்பில் ஜாலியன் படுகொலைக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனது வருத்தத்தை பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England ,incident ,Jallianwabak , Jallianwaleck, century century memorial, England, sad
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது