×

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில் ஒரு சில மட்டுமே திருடப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில் ஒரு சில மட்டுமே திருடப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களையும் ஏற்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், ரஃபேல் வழக்கின் மறு ஆய்வு மனு இனிமேல் தான் விசாரிக்கப்படவுள்ளது. ஆனால், ரஃபேல் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதி ஆவணங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது, உண்மையான முழு ஆவணங்கள் வெளியாகவில்லை. அதுவும் ஆவணங்களை கட் செய்து முழுமையாக வெளியிடாமல் மறைத்திருக்கிறார்கள். முறைகேடாக நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் ஆங்கில ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் மக்களை தவறாக வழி நடத்தவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் பொய் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Seetharaman ,interview , Rafael, documents, Nirmala Sitaraaman, Supreme Court
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...