×

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் குட்டிகளுடன் 20 யானை முகாம்

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு உட்பட பார்த்த கோட்டாவில் 20 யானைகள் முகாமிட்டுள்ளது.இந்த யானைகள் கிராமங்களில் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இதில் 10 யானைகள் கர்நாடக மாநிலம் பன்னார் கட்டாவில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக, ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. மேலும் 10 யானைகள் கோலார் வனப்பகுதியில் இருந்து தீர்த்தம், சூளகிரி வனப்பகுதி வழியாக சானமாவு வனப்பகுதியில் தற்போது 20 யானைகள் 4 குட்டிகளுடன் முகாமிட்டு சுற்றி வருகின்றன.

இந்த 20 யானைகள் நேற்று முன்தினம் இரவு பிள்ளைகொத்தூர் வழியாக பாத்தகோட்டா கிராம பகுதியில் விளை நிலங்களில் புகுந்து அறுவடைக்கு தயாராக முட்டைகோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதை நேற்று காலை கண்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். ஏற்கனவே வறட்சி ஏற்பட்ட போதிலும், காய்கறிகளை பயிரிட்டோம். ஆனால் யானைகளால் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும், வனப்பகுதியிலே குட்டைகள், தொட்டிகள் அமைத்து நீரை சேமிப்பதன் மூலம் யானைகள் நிலத்திற்கு வருவதை தடுக்க முடியும் என்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது வெயில் காலம் என்பதால் அடர்ந்த வனப்பகுதியில் நீர்நிலைகள் வற்றியுள்ளது. இதனால் யானைகளை விரட்டினாலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்ல மறுக்கின்றன. ஓசூர் வனப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆறு வற்றாத ஜீவ நதியாக இருப்பதால் விவசாயிகள் தொடர்ந்து பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இங்கு யானைகளுக்கு பயிர்களும், குடிநீரும் கிடைப்பதால் ஓசூர் வனப்பகுதியை விட்டு செல்ல மறுக்கின்றன. ஆனாலும் கிராம பகுதியில் நுழைந்த யானைகளை விரட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elephant camp ,kittens ,forest ,Hoshiarai , Hosur, Chanamavu, Elephant
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு