×

டெல்லி மருத்துவமனையில் திபெத்திய புத மத தலைவர் தலாய்லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை

டெல்லி: திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு உடல் நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்பதற்காக தலாய்லாமா டெல்லி வந்து இருந்தார். கடந்த திங்கள் கிழமைதான் டெல்லியில் இருந்து தர்மசாலாவுக்கு சென்ற நிலையில், மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி வந்து உள்ளார்.

டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மக்ஸ் மருத்துவமனையில் 83-வயதான தலாய்லாமா, உடல் நல பரிசோதனையை மேற்கொண்டார். மருத்துவமனையில் தலாய்லாமா அனுமதிக்கப்பட்டாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி வந்தார். சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959-ம் ஆண்டு 14-வது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination ,Dalai Lama ,Tibetan Buddhist ,Delhi Hospital , Delhi hospital, Tibetan religious leader Dalai Lama, medical examination
× RELATED ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார...