×

நில மோசடி விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யலாம்: போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில மோசடி வழக்குகளில் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராதவர்களை கைது செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் தர்மலிங்கம், அவரது மனைவி சங்குபதி ஆகியோர் மீது மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நில மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இதுதொடர்பாக டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும். விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யலாம். இந்த வழக்கில் தர்மலிங்கம் மற்றும் சங்குபதி ஆகிய இருவரும் மாதவரம் போலீசில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The High Court , Land scam, investigation, arrest, high court, order
× RELATED அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!