×

பறக்கும்படை சோதனையில் 68.44 லட்சம் பறிமுதல்

சென்னை: மதுரவாயல், மேட்டுகுப்பம், மெயின் ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்கமல் தலைமையில் நேற்று வாகன சோதனை நடந்தது.அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை நடத்தினர். அதில் வந்த பிரசாந்த் (22) என்பவரிடம் ₹66 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. அந்த பணம் தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும்,  முறையான ஆவணம் இல்லை எனவும் தெரிய வந்தது.இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து வளசரவாக்கம் மண்டல அலுவலக தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லி அரசு கருவூலத்துக்கு கொண்டு  செல்லப்பட்டது.

lசோழவரம் ஒரக்காடு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த ஆசாமியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவரது பையில் ₹1.70 லட்சம் இருப்பது தெரிந்தது.  விசாரணையில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த லால்வாணி மகேஷ் (50) என்பதும், நல்லூர் சுங்க சாவடியில் மேற்பார்வையாளராக பணியாற்றுவதும் தெரிந்தது. அவர் வைத்திருந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால்,  அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drone test , 68.44 lakhs ,seized
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் டிரோன் சோதனை மையம்: அமைச்சர் தகவல்