சாம்சங் ஓபன் டென்னிஸ் சுவாரசை வீழ்த்தினார் போலோனா

லுகானோ: சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சாம்சங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்லோவகியா வீராங்கனை போலோனா ஹெர்காக் தகுதி பெற்றார்.முதல் சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் கர்லா சுவாரசுடன் (27வது ரேங்க்) மோதிய போலோனா (89வது ரேங்க்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய  அவர் 6-3, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.முன்னணி வீராங்கனைகள் கிறிஸ்டினா பிளிஸ்கோவா (செக்.), டிமியா பாக்சின்ஸ்கி (சுவிஸ்), வேரா லாப்கோ (பெலாரஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>