×

படிப்பா பாஸ் முக்கியம்... ஜெயிக்கறதுதான் முக்கியம் பாஜ டாக்டரை எதிர்க்கும் 5ம் கிளாஸ்

அகமதாபாத்: குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 52 பேரில் பாஜவைச் சேர்ந்த 14 பேர், காங்கிரசைச் சேர்ந்த 11 பேர் பட்டப்படிப்பை எட்டிப் பார்க்காதவர்கள்.  காங்கிரசை் சேர்ந்த 4 பேர், பா.ஜ.வில் ஒருவர் மெட்ரிகுலேசனையே தாண்டவில்லை. சுரேந்திரநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிடும் மகேந்திர முஞ்ச்பரா, எம்பிபிஎஸ் படித்து விட்டு பின்னர் பி.ஹெச்டி படித்துள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோமா பட்டேல் 5ம்  வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார். முஞ்ச்பரா தற்போது முதன்முதலில் தேர்தலில் போட்டியிடுகிறார். சோமா பட்டேல் 3 முறை எம்.பி.யாக இருந்தார். 2017ம் ஆண்டு லிம்படி தொகுதி எம்எல்ஏவாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ. சிட்டிங் எம்.பி., கீர்த்தி சோலங்கி மீண்டும் அகமதாபாத் (மேற்கு) தொகுதியில் போட்டியிடுகிறார். இவரும், வல்சாத் வேட்பாளர் கே.சி. பட்டேல், பர்டோலி தொகுதி காங்.,  வேட்பாளர் துஷார்  சவுத்ரி ஆகியோர் எம்பிபிஎஸ் படித்துள்ளனர். பனஸ்கந்தா தொகுதியில் போட்டியிடும் பார்பட் பட்டேல், படன் தொகுதியில் போட்டியிடும் பாரத்சிங் தப்ஹி ஆகியோர் வக்கீலாக உள்ளனர். ஆனந்த் மக்களவை தொகுதியில்  போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் மிதேஷ் பட்டேல், காங்., வேட்பாளர் பாரத்சிங் சோலங்கி ஆகியோர் இன்ஜினியர்கள். பஞ்ச்மால் தொகுதி பா.ஜ. வேட்பாளர் ரத்னசிங் ரத்தோட், தாகூத் தொகுதி பா.ஜ. வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் பாபர்  ஆகியோர் பி.எட். படித்துள்ளனர். இவர்கள் தவிர காங்கிரசைச் சேரந்த 5 பேர், பா.ஜ.வைச் சேர்ந்த 2 பேர் பி.காம் பட்டதாரிகள் ஆவர். பாவ்நகர் தொகுதி பா.ஜ. வேட்பாளர் பார்த்திபென் ஷியால் ஆயுர்வேதிக் மருத்துவம் மற்றும்  அறுவை சிகிச்சையில் பிஏஎம்எஸ் பட்டமும், இதே தொகுதி காங் வேட்பாளர் மன்ஹர் பட்டேல் வேளாண்மையில் டிப்ளமோவும் படித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalaksham ,Bhajan Doctor , important, important, Bhaj Dr,opposite
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...