×

தர்பார் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சன்  பிக்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட  படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்  அடுத்து நடிக்கும் படத்தை  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம்  தயாரிக்கிறது. அனிருத்  இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு  செய்கிறார். இதில் ரஜினிகாந்த்  ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

முக்கிய  வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்க  உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  நேற்று காலை வெளியிடப்பட்டது.  படத்துக்கு தர்பார் என தலைப்பிட்டுள்ளனர்.  இதில் ரஜினிகாந்த் குறுந்தாடி  வைத்து, கருப்பு கண்ணாடி அணிந்து சிரிக்கும்  புகைப்படம் வெளியாகியுள்ளது.  அருகில் மும்பை இந்தியா கேட், போலீஸ்  தொப்பி, பெல்ட், கை விலங்கு,  துப்பாக்கிகள் கலந்த கலவையாக போஸ்டர்  வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Darbar, First Look,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...