நீங்க நேரடியா மோதிக்கோங்க.... நாங்களும் கோதாவில் குதிப்போம்: அசராமல் களமிறங்கும் 59 கட்சிகள்

அகமதாபாத்: குஜராத்திலுள்ள 26 மக்களவை தொகுதியிலும் பாஜவுக்கும், காங்கிரசிற்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளான இந்துஸ்தான் நிர்மண்தன், பகுஜன் முக்தி ஆகிய கட்சிகள் முறையே 8 மற்றும் 6 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. மீட்புரிமை கட்சி மற்றும் வியவர்ஷா பரிவர்தன் கட்சி தலா 4 தொகுதியில் போட்டியிடுகின்றன. ஹருவி குஜராத் கட்சி, மனவதிகர் தேசிய கட்சி, சர்தார் வல்லபாய் படேல் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த கட்சிகள் தவிர குஜராத் ஜன பஞ்சாயத்து கட்சி, ராஷ்டிரிய ஜனகிரந்தி கட்சி தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. யுவசர்கார் கட்சி, நவ்சரி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகள் 50 வயதை தாண்டியவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கக்கூடாது. 35 வயதுக்குட்பட்டவர்கள் 65% மேல் இருந்தும் முதியவர்கள் கையில்தான் அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>