×

டிக்டாக் தடைக்கு எதிரான மனு மீது 15ல் விசாரணை உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி:  டிக் டாக் ஆப் பதிவிறக்கம் செய்வதற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை  வரும் 15ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளத்தில் தற்போது டிக் டாக் செயலி பிரபலம் அடைந்துள்ள நிலையில், டிக் டாக் ஆப் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 3ம் தேதி, டிக் டாக் ஆப் பதிவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சீன நிறுவனமான பைடிடேன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும், இந்த மனு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தபோது, இதை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என நீதிபதிகள்  தெரிவித்தனர். இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா அமர்வு, மனு 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court, tiktOk,
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை