×

கணவரால் துரத்தப்பட்ட பெண் எங்கிருந்தாலும் வழக்கு போடலாம்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரூபாலி தேவி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் தனது கணவர், மாமனார், மாமியாருக்கு எதிராக வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், `வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதல் தொடர்பான பிரச்னையில் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் தற்போது எங்கு தங்கியுள்ளாரோ அந்த இடத்தில் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர முடியும்’ என தீர்ப்பளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anywhere , SUPREME COURT
× RELATED புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை