×

எங்களுக்கு இப்போ இரண்டு எதிரி 22 தொகுதியிலும் ஜெயிப்போம்.... ஆட்சியை மாற்றுவோம்..... சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆவேசம்

மக்களவை, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பண மழையை பொழிவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

அதிமுக 8 ஆண்டுகால ஆட்சியில் எந்த சாதனையையும், மக்கள் நலத்திட்டங்களையும் செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும் எந்தவித சாதனையும் செய்யாமல் மக்கள் விரோத ஆட்சியாக தேர்தலை சந்திக்கிறார்கள். எப்போதும் மாதிரி பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற கண்ணோட்டத்துடன் அதிமுகவினர் இருக்கிறார்கள். மக்களிடம் சென்று வாக்குகளை கேட்டு அந்த வாக்குகள் மூலம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆளும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் வருமானவரித்துறை உடந்தையாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தப்படுகிறது. மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்கிறார்கள். எல்லா நேரமும் பணம் வெற்றி ெபற்றது இல்லை. ஜனநாயகத்தில் பணமே வெற்றி பெற வேண்டும் என்றால் டாடா, அம்பானி போன்றவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும். பணவினிநோயகத்துக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும். கண்டிப்பாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பணத்தை நம்பி தான் இந்த கட்சிகள் இருக்கிறது என்று இப்போது மக்களுக்கு நல்லா தெரியும்.

எதிர்க்கட்சியினர் அடக்கப்படுகிறார்களா?

அதிமுக அரசு அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை அடக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது படுமோசமான நிலையில் உள்ளது. பொள்ளாச்சி பாலியல் தொல்லைகளை பார்த்தீர்கள் என்றால், கடந்த 7 ஆண்டாக நடந்து ெகாண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்ப இவர்கள் எல்லாம் தங்களுடைய ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நடவடிக்கையும், ஆளுங்கட்சிக்கு ஒரு நடவடிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஜனநாயகத்தில் பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் கூட பேச விடாத ஒரு ஆளுங்கட்சி இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் குறியாக இருக்கிறார்கள். அதை மீறி தான் நாங்கள் போராட வேண்டியது உள்ளது.

பணமழையை எதிர்த்து நீங்கள் எந்த மாதிரி பிரசாரத்தை கையில் எடுத்துள்ளீர்கள்?

மக்கள் பாச மழையில் எங்கள் தலைவர்கள் எல்லாம் நனைந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் போகும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளம். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வாக்காளர்களை சந்திக்கும் இடம் எல்லாம் மக்கள் இந்த முறை திமுக மற்றும் தோழமை கட்சிக்கு தான் வாக்கு என்ற அளவில் இருக்கிறார்கள். பணமழையை நம்பிக்கிட்டு தேர்தலில் இறங்கினார்கள் என்றால் எல்லோரும் போய் ஆஸ்பத்திரியில் ஐசியுவில் அட்மிட் ஆக வேண்டியது தான்.

எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறதா?.

போலீஸ் டிஜிபியை மாற்ற சொன்னோம். 3 முறை புகார் கொடுத்தோம். இதுவரை மாற்றவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் தலைமை செயலாளரையே மாற்றி விட்டார்கள். அப்படி ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிற ஆட்சி இது. தேர்தல் கமிஷனில் தான் முறையிட வேண்டும். முறையிடும் இடமும் அது தான். தேர்தல் கமிஷனிடம் இப்படி எல்லாம் முறையிட்டு இருக்கிறோம் என்று மக்களிடம் சொல்வோம். இறுதி ஏஜமானர்கள் மக்கள் தான். ஆளுங்கட்சி பணம் கொடுக்கிறார்கள், சட்டத்தை மீறுகிறார்கள், அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்கிறார்கள். வேட்பாளர்களை கட்டுப்படுத்துகிறார்கள். தேர்தல் கமிஷன் மத்திய சென்னையில் மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்களை போடுகிறார்கள். மற்ற வேட்பாளர்களுக்கு ஒரு பார்வையாளர் தான். இது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. எங்களுக்கு 2 எதிரி. ஒன்னு ஆளுங்கட்சி, இரண்டாவது தேர்தல் கமிஷன். இரண்டு பேரையும் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். போலீஸ் வண்டி, போலீஸ் ஜீப்பில் எல்லாம் பணத்தை கடத்துகிறார்கள். அது தொடர்பாக பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த தேர்தல் கமிஷன் செவி சாய்க்கிற மாதிரி தெரியவில்லை. போலீஸ் வாகனத்தில் கொண்டுவரும் பணத்தை மக்களே பறிக்கும் நிலை தான் வரும்.

தேர்தல் முடிவுகளால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா?

ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்று கொள்ள முடியாதது. இருந்தாலும் இந்த ஆட்சியை கவிழ்ப்பதில் மக்கள் ரொம்ப விருப்பத்தில் இருக்கிறார்கள். இரண்டாண்டு காலம் மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி வைத்து கொண்டு, 118 தான் மெஜாரிட்டி, 110க்கு உள்ள தான் இருக்கிறது. அதையும் வைத்து விட்டு 2 வருடமாக பாஜக துணையோடு ஆட்சியை நடத்தி விட்டாரகள். அதை மக்களிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் 22  தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். எங்கள் தேர்தல் வாக்குறுதியிலும் இதை கூறியிருகிறோம். இதன் மூலம் தற்போதைய அதிமுக அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். விரைவில் தேர்தல் மூலம் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைப்போம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opponents ,district ,DMK ,J.Abhulganan MLA ,Chennai , Regime, Chennai,.DMK J.Anabalagan, MLA
× RELATED நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்