×

சத்தீஸ்கரில் மாவோஸ்டுகள் தாக்குதல்: பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உட்பட 4 காவலர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் 91 மக்களவை மற்றும் 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதனால், பிரதமர் மோடி, காங். தலைவர் ராகுல் போன்ற தலைவர்கள் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நாளை மறுநாள் (ஏப். 11) முதல்கட்டமாக  20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்களில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவதால், மேற்கண்ட தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உள்ளிட்ட பாஜகவினர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோஸ்டுகள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம்.எல்.ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி மற்றும் அவருக்கு பாதுகாப்புக்குச் சென்ற 4 காவலர்களும் உயிரிழந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு கட்சி தலைவர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகேல் உச்சகட்ட ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,guards ,Chhattisgarh ,MLA ,Bhima Mondovi ,BJP , Chhattisgarh, Maoists, attack, BJP MLA Bhima Mandvi, guards
× RELATED ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!