முதல் வாக்கை இந்திய விமானப்படை வீரர்களுக்கு அர்ப்பணியுங்கள் : பரப்புரையில் இளைஞர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை

பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இங்கு உள்ள சிலருக்கு வலிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒருபடி மேலே போய் ராணுவ வீரர்களையே சந்தேகித்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். ராணுவ வீரர்களுக்கு எதிராக பேசினால் தனக்கு வாக்கு வங்கி கிடைப்பதாக முதல்வர் குமாரசாமி நினைத்து கொண்டு இருக்கிறார் என்று கூறிய மோடி, அவருக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்திராவில் மோடி பரப்புரை

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க போகும் இளைஞர்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு தங்கள் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்திரா மாநிலம் லாத்தூரில் பரப்புரை மேற்கொண்டு போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியினரிடம் இருந்து கோடி கோடியாக கறுப்புப் பணம் சிக்கி வருவதாகவும் தன் மீது எதிர்க்கட்சியினர் வெறுப்பை காட்ட இதுவே காரணம் என்றும் மோடி சாடினார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கோடி கறுப்புப் பணம் பிடிப்பட்டு இருப்பதாகவும் மோடி விமர்சித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இரவு முழுக்க நடந்த கொடூரம்...